'உலகைக் குலுக்கிய' ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு இது. இந்த நூறு ஆண்டுகளில் உலகம் தலைகீழ் மாற்றங்களைச் சந்தித்துவிட்டது. ஒரு காலத்தில் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் தாயகமாகத் திகழ்ந்த அகண்ட சோவியத் யூனியன் இன்று ரஷ்யா மட்டுமே. மற்ற பகுதிகள் அனைத்தும் உதிர்ந்து சிதறிவிட்டன. பிரதேசங்கள் மட்டுமல்ல, லெனின் முன்வைத்த புரட்சிகர சித்தாந்தமும்கூட விலகிச்சென்றுவிட்டது.
விளாதிமிர் லெனின் இருந்த இடத்தில் இன்று விளாதிமிர் புடின் அமர்ந்திருக்கிறார். (புதிய ஜார் என்றே அவர் இன்று அழைக்கப்படுகிறார்). சோவியத்தால் உந்தப்பட்டு சோஷலிசத்தைத் தழுவிக்கொண்ட தேசங்கள் அனைத்தும் திட்டவட்டமாகத் தங்கள் பாதைகளை மாற்றிக்கொண்டுவிட்டன.
புடினுக்கு புரட்சி என்னும் சொல்லே பிடிக்கவில்லை என்கிறது நியூ யார்க் டைம்ஸ். அவர் மட்டுமல்ல, தன்னுடைய அதிகாரம் மக்களால் கைப்பற்றப்படுவதை எந்தவொரு அரசியல் தலைவரும் விரும்பமாட்டார். அந்த வகையில், ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை புடினைப் போல் அமைதியாகப் புறக்கணிக்கவே அவர்கள் விரும்புவார்கள். ஒரு வகையில் அதுவே இயல்பானதும்கூட.
எப்படியும் ரஷ்யப் புரட்சி என்பது தலைவர்களுக்கானதல்ல, மக்களுக்கானது. எனவே அதை நாம்தான் நினைவுகூர்ந்தாக வேண்டும்.
ரஷ்யப் புரட்சி குறித்து ஒரு எளிமையான அறிமுகத்தை அளிக்கும் வகையில் இங்கே கொஞ்சம் தொடர்ச்சியாக எழுதிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இதையே சாக்காக வைத்து நீண்டகாலமாகச் செயல்படாமல் இருந்த இந்தத் தளத்தை இப்போது புதுப்பித்திருக்கிறேன்.

அருமையான முயற்சி. பட்டையைக் கிளப்புங்கள்.
ReplyDeleteநிச்சயமாக படிக்கிறோம். கம்யுனிஷம் எங்கிருந்து எந்த அளவிற்கு மாறியுள்ளது என்றும் எழுதுங்கள்.
ReplyDelete